ஐசிசி ரி20 உலகக்கிண்ணத் தொடரின் முதற்சுற்றுப் போட்டிகள் நிறைவு பெற்றுள்ளன.

அதன்படி, இன்று இடம்பெற்ற இறுதிப் போட்டியில் நெதர்லாந்து அணியை எதிர்த்தாடிய இலங்கை அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட நெதர்லாந்து அணிக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அதன்ப்டி, முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 10 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.

அவ்வணி சார்பில் அதிகபட்சமாக Colin Ackermann 11 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.

ஏனைய வீரர்கள் அனைவரும் 10ற்கும் குறைவான ஓட்டங்களில் ஆட்டமிழந்து வௌியேறினர்.

அதிரடி பந்து வீச்சில் ஈடுபட்ட வனிந்து ஹசரங்க மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுக்களை அதிகபட்சமாக வீழ்த்தினர்.

மஹீஸ் தீக்‌ஷன ஒரு ஓவர்களை வீசி 3 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களை வீழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய, 45 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 7.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் ஜனித் பெரேரா ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

அதன்படி, முதற்சுற்று போட்டிகளில் இலங்கை ஆடிய மூன்று போட்டிகளிலும் வெற்றிப் பெற்று சூப்பர் 12 சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது. 

Adaderana 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.