புதியதொரு மசோதாவை நிறைவேற்றாமல் பழைய முறைமையிலும் மாகாண சபை தேர்தலை நடாத்த முடியாதென்று சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதாக தேர்தல் சட்ட சீர்திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் தலைவரும் அமைச்சருமான தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

நேற்று (08) இடம்பெற்ற தேர்தல் சட்ட சீர்திருத்தம் தொடர்பான பாராளுமன்ற விசேட குழுவின் கூட்டத்தின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நீண்ட காலமாக மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் இயங்கும் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறுவது அவசியம் என்ற போதிலும் அதற்கு முன்பாக இருக்கும் ஒரே சிக்கல் குறித்த சட்ட பிரச்சினையாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.