புத்தளம் மாவட்டம் முந்தல் பிரதேச செயலாளர் திருமதி ஜே.ஏ.விஜானி வசந்திகா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க மதுரங்குளியில் அமைந்திருக்கும் மேர்ஸி லங்கா சமூக சேவை நிறுவனத்தினால் மதுரங்குளி பத்தாயம் எனும் கிராமத்திலுள்ள கனவனை இழந்த இரு வறிய குடும்பங்களுக்கு அங்க சம்பூரணமான இரண்டு வீடுகளை அமைத்து கொடுத்துள்ளது.

குறித்த நிகழ்வானது 07/10/2021 வியாழக்கிழமை காலை முந்தல் பிரதேச செயலாளர் தலைமையில் நடைபெற்ற வீடுகள் கையளிக்கும் நிகழ்வில் மதகுருமார்கள், புத்தளம் பிரதேச சபை தவிசாளர் அஞ்சன சந்தருவன், முந்தல் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. லக்ருவன், கிராம சேவகர் திருமதி கங்காரா மற்றும் செயலக அதிகாரிகள் ஆகியோர்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் அதிதிகளாக மேர்ஸி லங்கா  நிறுவனத்தின் பிராந்திய பொறுப்பாளர் ஜனாப் அப்துல்லாஹ் முனீர், திட்டப் பணிப்பாளர் ஜனாப் முனாஸ் றியாழ்,  திட்ட முகாமையாளர் ஜனாப் ஹஸன் ஸியாத் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது  உரையாற்றிய பலரும் மேர்ஸி லங்காவின் இப்பணியை பாராட்டியதோடு, சாதி, மத பேதமின்றி சேவையாற்றும் மேர்ஸி லங்காவின் போக்கினையிட்டுப் பெருமிதமடைந்தனர். நாட்டில் இனங்களுக்கிடையில் ஒற்றுமையும்,சகவாழ்வும், புரிந்துணர்வும் நிலவ இத்தகைய சேவைகள் பெரும் பங்காற்றும் எனவும் தெரிவித்தனர். 

குறித்த ஒரு வீட்டின் பெறுமதி சுமார்  ச 775,000/=  ரூபாய்கள்  செலவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 மேர்ஸி லங்கா ஊடகப் பிரிவு

(Siyane News)







கருத்துரையிடுக

Blogger இயக்குவது.