(ரிஹ்மி ஹக்கீம்)

அத்தனகல்ல பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத்திட்டம் நான்கு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவாக 27 வாக்குகளும் எதிராக 23 வாக்குகளும் அளிக்கப்பட்டன. ஆதரவாக ஆளும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்கள் வாக்களித்ததுடன், எதிராக ஐக்கிய தேசிய கட்சி, ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி, ஜேவிபி, ஜனநாயக தேசிய ஐக்கிய முன்னணி உறுப்பினர்களும் வாக்களித்தனர்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி உறுப்பினர் ஒருவர், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி உறுப்பினர்கள் வாக்கெடுப்பில் பங்குபற்றவில்லை. (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.