திருகோணமலை - கிண்ணியா - குறிஞ்சாக்கேணி களப்பில் படகு கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானமை தொடர்பில் உடனடியாக விசாரணை நடத்துமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அனுராதா யஹம்பத் உள்ளுராட்சி மன்ற ஆணையாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.

உடனடியாக விசாரணை நடத்தி குறித்த படகு இயங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டமை மற்றும் அதனை நிர்வகித்த தரப்பு பற்றிய விடயங்களை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை தனக்கு சமர்ப்பிக்குமாறு அவர் கேட்டுள்ளார். இது தொடர்பில் விசேட பொலிஸ் விசாரணையொன்றும் இடம்பெற்று வருகின்றது. இந்தவிபத்தில் 6 பேர் உயிரிழந்திருப்பதுடன், மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களில ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 30 வயதுடைய தாய், மகன், மகள் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.