- ஐ. ஏ. காதிர் கான் -

   சீரற்ற கால நிலையால், ரயில் பாதைகளின் தண்டவாளங்கள் சேதமடைந்துள்ளதன் காரணமாக, பிரதான ரயில் சேவைகள் மீரிகம -  பல்லேவல வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக, ரயில்வேத் திணைக்களம் அறிவித்துள்ளது.

   இதேவேளை, மீரிகமவிலிருந்து கொழும்பு வரையில் பயணிக்கும் ரயில் பாதையில் மீரிகம - விஜய ரஜதஹன ரயில் நிலையத்துக்கு அருகிலுள்ள ரயில் பாதையில், ரயில் தண்டவாளம் ஒன்று இன்று (14) சேதமடைந்துள்ளது.   இதன்காரணமாக, அந்த இடத்துக்கு அருகிலிருக்கும் மற்றுமொரு ரயில் பாதையும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும், ரயில்வேத் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

   இந்நிலையில், அந்த வீதியில் ரயில் போக்குவரத்து, வெயாங்கொடை வரையில் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன், தற்போது அந்த வீதிகளைப் புனர் நிர்மாணம் செய்யும் பணிகளில் ரயில்வேத் திணைக்கள அதிகாரிகள் விரைந்து செயற்படுவதாகவும், ரயில்வேத் திணைக்களம் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது. 


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.