திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பகுதியில் இடம்பெற்ற அனர்த்தம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் பொருத்தப்பட்ட குறித்த படகின் உரிமையாளர் உட்பட அதனை இயக்கிய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிஞ்சாக்கேணியில் நேற்று (23) குறித்த இழுமைப்படகு நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 4 சிறுவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்ததுடன் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் சம்பவம் குறித்து முன்னெடுத்த விசாரணைகளையடுத்து கிண்ணயா பொலிஸாரால் ஒருவரும் திருகோணமலை பொலிஸாரால் இரண்டு பேரும் கைது செய்யப்பட்டுள்ளளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர்களை தடுத்து வைத்துள்ளதோடு நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

திருகோணமலை நிருபர் பாருக் - அததெரண

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.