பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும் பாட்டியும் கைது!

Rihmy Hakeem
By -
0

 


பச்சிளம் குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்ட தாயும், பாட்டியும் பிரதேசவாசிகளால் தடுக்கப்பட்டதால், குழந்தை காப்பாற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட மட்டுவில் பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றது.

இளம்பெண் ஒருவர், தனது குழந்தையை உயிருடன் புதைக்க முற்பட்டார். இதற்கு உதவியாக தனது தாயாரையும் அப்பெண்  அழைத்து இக்காரியத்தை செய்ய முற்பட்டனர்.

இதையறிந்த அயலவர்கள், குழந்தையை காப்பாற்றினர். குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்டதையடுத்தே, அயலவர்கள் அங்கு சென்று குழந்தையை காப்பாற்றினர்.

சம்பவம் தொடர்பில், சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.   சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் குழந்தை ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தினகரன்

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)