கிண்ணியா - குறிஞ்சாக்கேணி பாலத்தின் கட்டுமானப்பணிகள் பூர்த்தியாகும் வரை பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் பயணம் செய்வதற்காக கடற்படையினரால் பாதுகாப்பான படகு சேவை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அண்மையில் குறிஞ்சாக்கேணி களப்பில் படகுப்பாதை கவிழ்ந்ததில் அறுவர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து களப்பிப்பினை கடந்து அன்றாடம் பயணிக்கும் மாணவர்கள் உள்ளிட்ட பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாலத்தின் கட்டுமான பணிகள் பூர்த்தியாகும் வரையில் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் நிசாந்த உழுகேதன்னவின் உத்தரவினையடுத்து மேற்படி பாதுகாப்பான படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

கிழக்கு கடற்படையின் மேற்பார்வையுடன் மேற்பார்வையில் நடைபெறும் இப்படகு சேவையில் ஒரே தடவையில் 25 பேருக்கு பாதுகாப்புடன் பயணிக்க முடியும். 

மேலும் குறித்த படகு சேவையானது மு.ப. 7.00 - மு.ப. 8.00 வரை மற்றும் பி.ப. 12.00 - பி.ப. 02.00 வரை நடைபெறும்.கருத்துரையிடுக

Blogger இயக்குவது.