இன்று (17) காலை 6.00 மணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலங்களில் சமையல் எரிவாயுவுடன் சம்பந்தப்பட்ட 18 வெடிப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இன்று காலையும் சமையல் எரிவாயு அடுப்பு வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த நவம்பர் 01 முதல் இதுவரையான 46 நாட்களில் சமையல் எரிவாயு தொடர்பான சம்பவங்கள் 770 பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.