உடுகொட அரபா மகா வித்தியாலய க.பொ.த. சாதாரண தர மாணவர்கள் கம்பஹா மற்றும் மினுவாங்கொட வலயங்களின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் எம்.ரி.எம். தௌஸீரினால் விசேட பரீட்சைப் பெறுபேற்று  சான்றிதழ்கள்  வழங்கி கௌரவிக்கப்பட்டனர். 

கொரோனாவின் பின்னரான க.பொ.த. சாதாரண தர மாணவர்களின் கல்வி மேம்பாட்டை இலக்காகக் கொண்டு கம்பஹா கல்வி வலயத்தினால் நடாத்தப்பட்ட விசேட பரீட்சை எழுதிய மாணவர்களே இவ்வாறு பிரதிப் பணிபாளரினால் கௌரவிக்கப்பட்டனர். 

அதிபர் எம்.எம்.ஏ. அலீம் தலைமையில் நேற்று பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வின் போதே இம்மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர். 

கம்பஹா கல்வி வலய தமிழ் மொழி மூல பாடசாலைகளில்  நடாத்தப்பட்ட இவ்விசேட பெறுபேற்று மேம்பாட்டுப் பரீட்சையின் பெறுபேற்று சான்றிதழ் வழங்கும் நிகழ்வுகளில், தான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இதுவென    பிரதிக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.  (மு - Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.