பாராளுமன்ற வளாகத்தில் மின் விநியோகம் சுமார் ஒரு மணித்தியாலம் தடைப்பட்டிருந்தமை நாசகார செயலா என்று கண்டறிவதற்கு விஷேட விசாரணைகளை ஆரம்பித்துள்ள குற்றவியல் விசாரணை திணைக்களம் அங்குள்ள அதிகாரிகள் உட்பட ஊழியர்கள் பத்துப்பேரிடம் அண்மைய நாட்களில் வாக்குமூலம் பெற்றுக்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

பாராளுமன்ற வளாகத்தில் இவ்வாறு ஒரு மணித்தியாலத்திற்கும் அதிகமாக மின் விநியோகம் தடைப்பட்டிருந்தது முழு நாட்டிலும் கடந்த 3 ஆம் திகதி மின் துண்டிப்பு ஏற்பட்ட சந்தர்ப்பத்திலாகும்.

மின் விநியோகம் துண்டிக்கப்படும் நேரங்களில் செயற்படுத்தப்படும் ஜெனரேட்டருக்கு தேவையான அளவு நீர் ஊற்றப்படாமை காரணமாக அந்த இயந்திரம் திடீரென செயலிழந்ததால் பாராளுமன்ற வளாகத்தில் மின்சாரம் இவ்வாறு துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. 

இது நாசகார செயலா என்று தொடர்ந்தும் தேடிப்பார்ப்பதாக குற்றவியல் விசாரணை திணைக்கள உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதேவேளை, அண்மையில் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பாராளுமன்ற வளாகத்தில் மின் விநியோக நடவடிக்கையை மின்சார சபையில் இருந்து பாராளுமன்றத்தின் கட்டுப்பாட்டிற்கு உடனடியாக பெற்றுக்கொள்வது முக்கியமான தேவையாகும் என்று தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (Siyane News)

Source 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.