உரம், சமையல் எரிவாயு பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டவை. முட்டாள்தனமான தீர்மானங்களே இப்பிரச்சினைகளுக்குக் காரணமாகும். எனவே, அதற்காக, மக்கள் முன்பு மன்னிப்புக்கேட்க வேண்டுமென ஆளுங்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரகொடி தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், அரசாங்கத்தின் ஊடாக ஒரு சிலருக்காவது நிவாரணங்கள் கிடைக்கின்றன என்பது மகிழ்ச்சியே. எனினும், இதனூடாக நாட்டின் ஒட்டுமொத்தப் பிரச்சினைகளையும் தீர்க்க முடியாது என்றார். 

கொரோனா வைரஸால் நாட்டில் சில பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன என்பது உண்மை. ஆனால், சிலரது செயற்பாடுகள் காரணமாகவே நாட்டுக்குள் பிரச்சினைகளை ஏற்பட்டுள்ளன. இதனை மக்கள் தாங்கிக்கொள்ள வேண்டுமென கூறுவதற்கு மனசாட்சி இடங்கொடுக்காது எனவும் தெரிவித்தார். 

உரம், சமையல் எரிவாயு தட்டுப்பாடு ஆகிய பிரச்சினைகள் நாட்டில் உருவாக்கப்பட்டவை. இதுபோன்ற முட்டாள்தனமான தீர்மானங்களை எடுத்தமைக்காக மக்களின் முன்பு வந்து மன்னிப்புக் கேட்டுப்பிரச்சினையை தீர்க்க வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.