குருநாகல், நாரம்மல பொது மைதானத்தில் நடைபெற்று வரும் York Star Challenge Trophy T20யின் முதலாவது காலிறுதிப்போட்டி நேற்று முன்தினம் (01)  இடம்பெற்றது. 

குறித்த போட்டியில் கஹட்டோவிட்ட Surray அணி, RC3 அணியை 05 விக்கெட்களால் வீழ்த்தி அரையிறுதிப்போட்டிக்கு தெரிவானது. 

முதலில் துடுப்பெடுத்தாடிய RC3 அணியினர் 20 ஓவர்கள் முடிவில் 08 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. சம்பத் அந்த அணி சார்பாக 37 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டார்.

பந்து வீச்சில் ஸப்ரான், இஸ்மத் ஆகியோர் தலா இரு விக்கெட்களையும் முகர்ரம், ஸிமாம், ரிம்ஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினையும் பெற்றுக்கொண்டனர். 

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Surrey அணியினர்  19 ஓவர்கள் நிறைவில் 05 விக்கெட்களை இழந்து வெற்றி இலக்கை தாண்டியது.

ஆரம்ப விக்கெட்களை விரைவாக ஆட்டமிழந்தாலும், மத்திய வரிசை துடுப்பாட்ட வீரர்களின் சிறந்த பங்களிப்பினால் Surrey அணியினர் வெற்றியை தமதாக்கிக்கொண்டனர். 

 ஸப்ரான் - 47 (6x5) 

ஸுல்பிகார் - 34 (6*4) - 14 பந்துகள்

 இஸ்மத் -20 (6x1)

 அன்வர் 11 (6x1)

 முஸ்தாக் -11 *

துடுப்பாட்டத்திலும் பந்து வீச்சிலும் சிறந்த பங்களிப்பை வழங்கிய Surrey அணியின் சகலதுறை ஆட்டக்காரர் ஸப்ரான் ஆட்ட நாயகனாக தெரிவு செய்யப்பட்டமை  குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.