மல்லிகைத் தோட்டத்துப் பூவொன்று உதிர்ந்து விட்டது.
இல்மைத் தேடி
நமது ஊர் நாடி
பறந்து வந்த சிட்டொன்று
மண் படுக்கை தேடிச் சென்று விட்டது.
இன்னாலில்லாஹ்.....
அவளை நான் கண்டிரேன்.
ஆனாலும் வலிக்கிறது
பெண் மனதல்லவா..?
வீட்டுக்குப் கொஞ்சம் பக்கமாய்
'முஅஸ்கர்' பெண்கள் அரபுக்கல்லூரி
மூன்று மாடிக் கட்டிடம்
மாண்பாய் கற்க வந்த ஒரு
மாணவி
தாயும் தந்தையுமாய் வந்து அழைத்துப் போகிறார்கள் விடுமுறையில்,
முறை தவறி வந்த பேருந்தின் வேகத்தால் நிலைகுலைந்து விட்டது இவர்கள் சென்ற முச்சக்கர வண்டி
தாயும் தந்தையும் அதிசிகிச்சைப் பிரிவில்
அவளது ஆன்மாவோ
சிறகடித்துப் பறந்து விட்டது
தன்னை அனுப்பி வைத்த தலைவனிடம் - நிகரில்லா நாயனிடம்
துஆக்களில் சேர்த்துக் கொள்ளுங்கள்
அந்த மல்லிகை நாளை
சுவர்க்கத்துப் பூஞ்சோலையில் மலரட்டும்.
அல்லாஹும்மஃபிர்லஹா வர்ஹம்ஹா....!!!!
Fayasa Fasil