எண்ணெய் இல்லை,மின்சாரம் இல்லை, எரிவாயு இல்லை.முழு நாடும் பேரழிவில்.

பொறுப்புடன் பதில் சொல்லுங்கள்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதற்போது நாட்டில் எரிவாயு, டீசல், மின்சாரம் போன்ற எதுவும் முறையாக இல்லை எனவும், நாடு பாரிய அழிவை எதிர்கொண்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது எதிர்க்கட்சியாக செயற்பட்ட தற்போதைய ஆளும் கட்சியின் அமைச்சர்கள், ஒருமுறை மின்வெட்டு ஏற்பட்டபோது மின்சார சபைத் தலைவரும், இரண்டு முறை மின்வெட்டு ஏற்பட்ட போது, ​​விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரும், மூன்று முறை மின்வெட்டு ஏற்பட்டதையடுத்து அரசாங்கமும் பதவி விலக வேண்டும் எனக்கூறியதை நினைவு கூர்ந்த எதிர்க்கட்சித் தலைவர், இன்று என்ன நேர்ந்துள்ளது என இன்றைய(23) பாராளுமன்ற அமர்வில் கேள்வி எழுப்பினார்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.