காலி மாவட்டம், ஹினிதுவ, தவலம பிரதேசத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் இன்று (11) எரிபொருளுக்காக வரிசையில் காத்திருந்த சாரதி ஒருவர் சாரதி ஆசனத்திலேயே உயிரிழந்துள்ளதாக ஹினிதும பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

43 வயதான திலக் குமார என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர் இன்று அதிகாலை 04.30 மணியளவில் எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு வருகை தந்திருந்ததுடன், அவர் காலை 06.30 மணியளவில் வாகனத்தில் வைத்தே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.