இளைஞர் பாராளுமன்ற வெளிவிவகார பிரதியமைச்சர் அஹ்மத் ஸாதிக் அவுஸ்திரேலியா உயர்ஸ்தானிக செயலாளரை சந்தித்தார்

இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகாரம் மற்றும் இராஜதந்திர உறவுகளின் பிரதி அமைச்சர் அஹ்மத் ஸாதிக், இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் முப்தி ஆகியோர் அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் இரண்டாம் செயலாளர் திருமதி லாரா செவய்ன்சன் அவர்களுடனான சந்திப்பொன்று அண்மையில் இடம்பெற்றது.

இச்சந்திப்பில் , இலங்கை திருநாட்டில் உயர் கல்வி ,வேலைவாய்ப்பு , வெளிவிவகாரம் மற்றும் சுற்றுலா துறை போன்றவற்றில் இளைஞர்களின் நிலைப்பாடு தொடர்பாகவும் மேலும் அதில் உள்ள குறைகள் குறித்தும் மேலும் இத்துறைகளில் அவுஸ்திரேலியா நாட்டின் இளைஞர்களின் நிலைப்பாடு குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின் பின்னர், இலங்கையின் வேலைவாய்ப்பு , உயர்கற்கை வீதம்/ உயர் கற்கை சலுகைகள் (Higher educational scholarships) , வெளியுறவுத்துறை மற்றும் சுற்றுலா துறை மேலும் வளர்வதற்கான தேவைப்பாடுகள் குறித்தும் விசேடமாக இலங்கை, அவுஸ்திரேலியா இளைஞர்களின் உறவுகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களுக்கான ஆதரவினை எதிர்காலங்களில் வழங்குமாறும் கேட்கப்பட்டது.

மேலும் இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாகவும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டார்.

Ahmath Sadique

Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament 🇱🇰
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.