நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமாறு பிரதமரிடம் கோரிக்கை விடுத்த பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்இன்று நாம் எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியானது இந்த அரசியல் அமைப்பை தவறாக பயன்படுத்தியதன் விளைவாகும் எனவும் அதைத்தான் இன்று நாம்மால் காணக்கூடியதாகவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் இன்றைய(07) பாராளுமன்ற அமர்வில் உரையாற்றும் போது தெரிவித்தார்.

நேற்று புதன்கிழமை, ஆசிய அபிவிருத்தி வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஒரு அறிக்கையை அல் ஜசீராவில் பார்தரத்தாகவும்,அதன் பிரதான தலைப்பு” ஆசியாவின் பொருளாதார வளர்ச்சி எதிர்பாராத வகையில் முன்னேறியுள்ளது” என்று அமைந்திருந்ததாகவும்,2022 ஆம் ஆண்டுக்குள், ஆசியாவில் முன்னோக்கி வரும் பொருளாதாரங்கள் 5.2% வளர்ச்சி இலக்கை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் அறிக்கை கூறுவதாக சுட்டிக்காட்டினார்.

அந்த அறிக்கையின் பிரகாரம், நமது நாடு உள்ளடங்களான தெற்காசியாவும், கிழக்கு ஆசியா மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகிய மூன்று பிராந்தியங்களும் கொவிட் நிலமைகளுக்கு முன்பு இருந்த வளர்ச்சி விகிதத்திற்கு திரும்பியுள்ளதாக கூறப்படுகிறது என சுட்டிக்காட்டிய அவர் அப்படியானால், நமது நாட்டை இந்நிலைக்கும், இந்த பேரழிவிற்கும் இட்டுச் சென்ற காரணிகள் என்ன? என்று நம்மை நாமே கேட்டுக்கொள்ள வேண்டும் என்றும்,குறுகிய அரசியல் கோணங்களில் பார்க்காமல் யதார்த்தத்தை புரிந்து கொள்ள முன் வர வேண்டும் எனவும் தெரிவித்தார். 

இன்று நாம் வரலாற்றில் மிக மோசமான பேரழிவை எதிர்கொண்டுள்ளோம். நமது நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதுதான் இன்று மேற்கொள்ள வேண்டிய மிக முக்கியமான விடயம் எனவும், நாடு எதிர்நோக்கும் இந்த துரதிஷ்டமான தருணத்தில் குறுகிய பதவிகளை பாதுகாப்பதற்காகவோ அல்லது தனது அரசியல் இருப்பை தக்கவைப்பதற்காகவோ பதவிகளை வெல்வதற்காகவோ குறுகிய எண்ணப்பாட்டில் செயற்படுவது நாட்டுக்கு செய்யும் பாரிய அநீதியாகும் எனவும், நாட்டின் எதிர்காலத்தை மேம்படுத்துவதற்கான பொருத்தமான, நடைமுறை வழிகளைப் பற்றி நாம் உண்மையாக சிந்திக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

இத்தகைய நெருக்கடிகளுக்கு முகம் கொடுத்த மலேசியா, இந்தோனேஷியா, தென் கொரியா,ஆப்பிரிக்க மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகளின் அனுபவங்களின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்களிலிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் எனவும், இன்று எமது மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்கள், மருந்துகள், எரிபொருள் போன்றவற்றை கொள்வனவு செய்வதற்கான நிதி மூலங்களே இல்லாமல் தவிப்பதாகவும் தெரிவித்தார்.

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு சர்வதேச நிதிச் சந்தைகளில் நம்பகமான நம்பிக்கை ஏற்ப்பட நம்பகமான மறுசீரமைப்பு அவசியமானது என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள விடயம் எனவும், ஒரு நாடு என்ற வகையில், நாட்டின் எதிர்காலத்திற்காக கடந்த இரண்டு வருடங்களாக வீழ்ச்சியடைந்துள்ள நிதி முகாமைத்துவத்தை சிறந்த முறையில் நிர்வகிப்பதற்கான சவாலை நாம் எதிர்கொண்டுள்ளோம் எனவும் சுட்டிக்காட்டிய அவர், இன்றைய பொருளாதாரப் பேரழிவில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய மக்களைக் கண்டறிய சமூகப் பாதுகாப்புத் திட்டம்(Social Protection) அவசியம் எனவும் வலியுறுத்தினார்.

1988 இல்,இந்நாடு வடக்கிலும் மற்றும் தெற்கிலும் வன்முறைகளால் எரிந்து கொண்டிருந்த நேரத்திலும், ‘ஜன சவிய' போன்ற நிவாரணத் திட்டங்களை நடைமுறைப்படுத்த சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை அன்றைய ஆட்சியாளர்களால் பெற முடிந்தது என்பதை நினைவுபடுத்திய அவர் இன்று நாம் எதிர்நோக்கும் பேரழிவிலிருந்து மீள்வதற்கு, இலங்கையின் ஏற்றுமதி கட்டமைப்பு விரிவாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டினார். அதற்கு நாம் ஒரு புரட்சிகர நடவடிக்கைக்கு செல்ல வேண்டும் எனவும்,ஆரம்ப நேரத்தில் தேயிலை,தேங்காய் மற்றும் இறப்பர் ஆகியவற்றின் ஏற்றுமதி வருமானத்தை முறியடித்து, சுற்றுலா மற்றும் ஆடைத் தொழில் ஏற்றுமதி பொருளாதாரங்கள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு சந்தையின் பாலான வலுவான நுழைவு ஆகியவை எங்கள் ஏற்றுமதி வருமானத்தை பெருமளவில் அதிகரிக்க உதவியது என்றும், இந்தப் பேரழிவிலிருந்து நாம் மீள வேண்டுமானால், அது ஏற்றுமதிக்கு மட்டுமே வழிவகுக்கும் நுழைவு முறை ஊடாகவே என்பதை ஒரு நாடாக நாம் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் சுட்டிக்காட்டினார்.

எதிர்வரும் மாதங்களில் நாட்டை நிலைபேனல் நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்றும் அதுதான் நம் நாடு எதிர்கொள்ளும் சவால் எனவும் தெரிவித்தார்.

நாட்டு மக்கள் இன்று வீதிக்கு

இறங்கியிருக்கிறார்கள்.நாட்டின் நடுத்தர வர்க்கத்தினரும் கூட இப்படி வீதியில்  இறங்கியிருப்பதை நாம் பார்க்கிறோம்.

இன்று நாடு முழுவதும் கட்சி, நிறம், வர்க்கம், இனம், மதம்,சாதி பேதங்கள் என்று வேறுபாடின்றி வீதியில் இறங்குவதைப் பார்க்கிறோம்.

எதிர்க்கட்சித் தலைவர் செவ்வாய்கிழமை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்டியதைப் போன்று, முழு நாட்டினாலும் நிராகரிக்கப்பட்ட நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்து, சட்டமன்றம், நிறைவேற்றுத்துறை மற்றும் நீதித்துறை ஆகியவற்றுக்கு இடையே சரியான வலுவேறாக்கத்துடன, மக்களுக்குப் பொறுப்புக்கூறக்கூடிய மற்றும் வெளிப்படையான அரசியல் அமைப்பை நோக்கி நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சுட்டிக்காட்டிய அவர், அடுத்த வாரத்திற்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் கூறியபோது, ​​பிரதமர் மேசையைத் தட்டி ஒப்புக்கொண்டதாகவும்,

கடந்த நான்கு தசாப்தங்களாக இந்த நாட்டில் உள்ள அனைத்து முக்கிய அரசியல் சக்திகளும் அதற்கு இணங்கியிருந்தன, ஆனால் அவ்வாறு கூறியவர்கள் ஆட்சிக்கு வந்ததும் அந்த ஒப்பந்தம் நிறைவேறவில்லை எனவும்,இப்போதாவது முழு நாட்டினதும் குரலுக்கு செவிசாய்த்து இந்த பதவியை நீக்குவதற்கான பிரேரணையை பாராளுமன்றத்தில் கொண்டு வருமாறு பிரதமரை கேட்டுக்கொள்வதாக இம்தியாஸ் பாக்கிர் மாக்கார் தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.