புத்தளம் மாவட்டம், தங்கொட்டுவ மற்றும் தம்பரவில பிரதேசங்களிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் எரிபொருள் நிரப்புவதற்காக வருகை தந்த இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு தங்கொட்டுவ - நீர்கொழும்பு பிரதான வீதியிலுள்ள எரிபொருள் நிலையத்தின் அருகில் நேற்று (09) உயிரிழந்தவர் 47 வயதான சமிந்த புஷ்பகுமார என்ற பஸ் சாரதி என்பதுடன், அவர் இரு நாட்களாக அந்த இடத்தில் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  தங்கொட்டுவ, தம்பரவில பிரதேச எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இன்று (10) உயிரிழந்த நபர் 50 வயதான முஹம்மத் சரீப்தீன் என்பவர் என்பதுடன், அவர் எரிபொருளை பெற்றுக்கொண்ட பின்னர் மோட்டார் சைக்கிளுக்கு காற்று நிரப்புவதற்காக சென்ற சந்தர்ப்பத்தில் சுகயீனமடைந்து மரணித்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். (Siyane News)

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.