இலங்கை வானொலியில் (Radio ceylone) இன்றைய SLBC யில்  முதலில் அஸான் (பாங்கு) சொன்ன பெருமை மர்ஹும்

இலங்கை வானொலியில் (Radio ceylone) இன்றைய SLBC யில்  முதலில் அஸான் (பாங்கு) சொன்ன பெருமை மர்ஹும்W. L. H. M ராமீஸ்  ஆலிம் அவர்களைச் சாரும். 

1888ம் ஆண்டு கொழும்பில் பிறந்த வாப்பு லெப்பை ஹாஜியார் முஹம்மத் ராமிஸ் ஆலிம் சிறந்த காரியாகத் திகழ்ந்தார்.

கொழும்பு ஸாஹிராக்கல்லூரியில் இஸ்லாம் பாட ஆசிரியராக நீண்டகாலம் கடமையாற்றினார்.

MICHஇன் ஏற்பாட்டில் ராமிஸ் ஆலிம் அவர்கள் "1947 ஜூன் 5ம் திகதி" இலங்கை வானொலியில் மஹ்ரிப் தொழுகைக்கான அஸான் கூறினார். 

அன்றைய தினம் ரமழான் நோன்பு தினமாக இருந்தது. 

ரமழான் மாதத்தில் கொழும்பு வெலிக்கடை மற்றும் மகசின் சிறைச்சாலைகளில்  கைதிகளுக்கான தராவீஹ் தொழுகையை நடத்திவந்தார்.

ராமிஸ் ஆலிம் அவர்கள் 1972ம் ஆண்டு ரமழான் மாதம் பிறை 12ல் தனது  84வது வயதில் காலமானார்கள். அவரது நினைவாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன முஸ்லிம் சேவை ரமழான்  பிறை 12ல்  மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் அஸானை மஃரிப் வேளையில் ஒலிபரப்பி வருகிறது.அவர்களின் அஸானை கீழே உள்ள லிங்கில் பெற்றுக்கொள்ளலாம்

 


(ஊடகவியலாளர் ருஸைக் பாரூக் ஊடாக இந்தப் படத்தை எனக்கு அனுப்பி வைத்தவர்   மர்ஹூம் ராமிஸ் ஆலிம் அவர்களின் பேரன் அல்ஹாஜ் நுஸ்ரத் ராமிஸ் அவர்கள்)

படத்தில் அரபு உடையில் மத்தியில் இருப்பவர் மர்ஹூம் W. L. H. M ராமீஸ்  ஆலிம் அவர்கள்

தொகுப்பு

பஸ்ஹான் நவாஸ் 

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.