முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பில், இந்தியாவின் தி ஹிந்து பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தி ஒன்று தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுக்குமாறு, இந்திய புலனாய்வுப் பிரிவினரால் இலங்கைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முன்னாள் விடுதலைப் புலிகள் அமைப்பால் இந்த மாதம் 18ஆம் திகதி இலங்கையில் தாக்குதல் ஒன்று முன்னெடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக இந்திய புலனாய்வுப் பிரிவை மேற்கோள் இட்டு, தி ஹிந்து பத்திரிகை இந்த மாதம் 13ஆம் திகதி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் இலங்கையின் புலனாய்வு பிரிவினரால் இந்திய புலனாய்வு பிரிவுகளிடம் காரணங்கள் வினவப்பட்டுள்ளதுடன், இந்த தகவல் சாதாரண தகவல் என்றும் இது தொடர்பில் விசாரணை செய்து, மேலதிக தகவல்கள் கிடைக்கப்பெற்றால் அதை இலங்கைக்கு அறிவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இந்தத் தகவல்கள் மற்றும் தேசிய பாதுகாப்பு  தொடர்பில் புலனாய்வு, பாதுகாப்பு தரப்பினருக்கு கிடைக்கும் சகல தகவல்கள் குறித்தும் உரிய விசாரணையை முன்னெடுத்து, சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் மிரர்

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.