இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

  Fayasa Fasil
By -
0

இலங்கையின் சமகால நிலைமை குறித்து உன்னிப்பாக அவதானிப்பதாக சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் ஜெரி ரைஸ் இதனை அறிவித்துள்ளார்.

இலங்கையின் அரசியல் மற்றம் சமூக நிலை குறித்து சர்வதேச நாணய நிதியம் அவதானத்துடன் உள்ளது.

விரைவில் இந்தப் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்பிக்கை கொள்வதாகவும், அதன் பின்னர் சர்வதேச நாணய நிதிய திட்டம் குறித்து தங்களுக்கு மீளவும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்க முடியும் என்றும் அதன் பேச்சாளர் கூறியுள்ளார்.

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நிலைமை சீராக இல்லை. இந்த நிலையில் அது குறித்து உறுதிப்பாடு அவசியமாகும் என சர்வதேச நாணய நிதியத்தின் பேச்சாளர் கூறியுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)