இலங்கையின் புதிய ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கு சீனா ஜனாதிபதி ஜி ஜின்பிங் தனது ஆதரவை வெளியிட்டுள்ளார்.

சீனாவின் அரசாங்க ஊடகமான சிசிடிவி இதனை தெரிவித்துள்ளது.

தனது செய்தியில் இலங்கையால் பொருளாதார சமூக மீட்சியை நோக்கி செல்லமுடியும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள சீன ஜனாதிபதி ரணில்விக்கிரமசிங்கவிற்கும் இலங்கை மக்களிற்கும் அவர்களின் முயற்சிகளிற்கும்  என்னால் முடிந்த ஆதரவை வழங்கமுடியும் என தெரிவித்துள்ளார் என சிசிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்குண்டுள்ள தருணத்திலேயே சீன ஜனாதிபதியின் இந்த செய்தி வெளியாகியுள்ளது.

சீனாவிற்கு இலங்கை ஐந்து பில்லியன் டொலர் கடனை செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும் சில மதிப்பீடுகள் இலங்கை செலுத்தவேண்டிய கடன் இதனை விட பல மடங்கு அதிகம் என தெரிவிக்கின்றன.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.