(ஹஸ்பர்)

திருகோணமலை மாவட்டம், தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் தெரிவு செய்யப்பட்ட கால் நடை வளர்ப்பாளர்களுக்கான கரவைப் பசு மாடுகள் வழங்கி வைக்கப்பட்டன. 

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ. ஸ்ரீபதி தலைமையில் இன்று (26) இந் நிகழ்வு கல்மெடியாவ வடக்கு கிராம சேவகர் பிரிவில் இடம் பெற்றது. முஸ்லிம் எயிட் நிறுவனம் ஊடாக சுமார் 35 பயனாளிகளுக்கு தலா 300,000 ரூபா பெறுமதியான கரவை பசு மாடுகள் பயனாளிகளிடத்தில் ஒப்படைக்கப்பட்டன. 

கரவைப் பசு மாடுகள் வளர்ப்பின் ஊடாக பாற் பண்ணை தொழில் மூலமான நாளாந்த வருமானத்தை அதிகரிக்கவும் தற்போதைய நிலையில் பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்து வருமானத்தை அதிகரித்த இதனை பயன்படுத்துவது சிறந்தது எனவும் இத் திட்டம் ஊடான எதிர்பார்ப்பாக காணப்படுகிறது.


இதன் போது முதலுதவி பெட்டிகளும் கால் நடை வளர்ப்பாளர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன. 

குறித்த நிகழ்வுக்கு பிரதம அதிதியாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் பி.எச்.என்.ஜயவிக்ரம, உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப், முஸ்லிம் நிறுவனத்தின் இலங்கைக்கான வதி விடப் பிரதிநிதி ஏ.சி.பைசல்கான், கால் நடை வைத்தியர் உட்பட பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.




கருத்துரையிடுக

Blogger இயக்குவது.