(அஷ்ரப் ஏ சமத்)
பாகிஸ்தானின் 75ஆவது சுதந்திர தினம் கொழும்பில் உள்ள பாகிஸ்தான் உயா் ஸ்தானிராலயத்தில் இன்று காலை நடைபெற்றது.
பாகிஸ்தான் உயர்ஸ்தானிகா் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் உமா் பாருக் புர்க்கி தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பாகிஸ்தான் கொடியேற்றுதலுடன் தேசிய கீதம் இசைத்தல், மற்றும் பாகிஸ்தான் ஜனாதிபதி மற்றும் பிரதமரின் சுதந்திர தினச் செய்திகள் உயா் ஸ்தானிகராலயத்தின் செயலாளா் ஊடகச் செயலா்களினால் வாசிக்கப்பட்டது.
இங்கு உரையாற்றிய பாகிஸ்தான் உயா் ஸ்தானிகா்,
பாகிஸ்தான் சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் நீண்ட கால உறவு இருந்து வருகின்றது.
பாகிஸ்தான் இலங்கை நட்புறவுத் தொடா்புகள் மற்றும் கல்வி, வா்த்தகம், ஏற்றுமதி, இறக்குமதி, கலை கலாசாரம், பௌத்த மதம், சுற்றுலாத்துறை, போன்ற துறைகளில் சுதந்திரமடைந்திலிருந்து கடந்த 75 வருட காலமாக எமது இராஜாந்திர உறவுகள் இருந்து வருகின்றன.
இலங்கையின் கடந்த கால யுத்த காலத்திலும் பாகிஸ்தான் பாதுகாப்புப் பிரிவிலும் பங்களிப்பினை இலங்கைக்கு செய்து வந்துள்ளது.
காயிதே மில்லத் முஹம்மதலி ஜின்னா எமது நாட்டிற்கு சுதந்திரத்தினைப் பெற்றுத் தந்தாா். இச் சுதந்திர தின நிகழ்வில் அவரை நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம்.
பாகிஸ்தான் - இலங்கை கலாசாரம் மற்றும் பௌத்த மதத்தின் தொடா்புகள் 2500 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே வந்துள்ளன.
தற்போதைய இலங்கை நாட்டின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மற்றும் பிரதமர் தினேஸ் குணவா்த்தன ஆகியோரின் தலைமையில் பாகிஸ்தான் நட்புறவுகள் மீண்டும் வலுப்படுத்தப்படுமெனவும் பாகிஸ்தான் உயா்ஸ்தானிகா் அங்கு தெரிவித்தார்.