(ஹஸ்பர்)
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் காணி அனுமதிப் பத்திரம் வழங்குவதற்கான காணி கச்சேரி பிரதேச செயலக மண்டபத்தில் (25) இடம்பெற்றது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி தலைமையில்;, பாரதி புரம், புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதியில் உள்ளவர்கள் காணி அனுமதிப்பத்திரம் பெற இந்தக் காணிக் கச்சேரி இடம்பெற்றது.\
இதில் அனுமதிப்பத்திரம் பெறுவதற்காக விண்ணப்பித்தவர்களின் ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டன.
இந்நிகழ்வில், காணி கிளை உத்தியோகத்தர்கள், கிராம சேவகர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.