தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக தௌபீக் நியமனம்

தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளராக ஏ.ஆர்.எம். தௌபீக் நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்த்தனவின் சிபாரிசுடன் சுகாதார அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெலவினால் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

இதற்கமைய இன்று (27) சனிக்கிழமை இவர், தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

வைத்திய நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான இவர், கிழக்கு மாகாண சுகாதார பணிப்பாளராக இறுதியாக கடமையாற்றியமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.