தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனத்துக்குள் நுழைந்து, அதன் ஒளிபரப்புக்கு இடையூறு ஏற்படுத்தியதாக குற்றச்சாட்டுக்கு உள்ளான இரண்டாவது நபரும் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சமூக செயற்பாட்டாளரான சமிந்த கெலும்பிரிய அமரசிங்க (45) என்பவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்றைய தினம் கறுவாத்தோட்டம் காவல்நிலையத்துக்கு வந்து சரணடைந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
இதேவேளை, கடந்த ஜூலை 13 ஆம் திகதி ரூபவாஹினி கலையகத்துக்குள் நுழைந்து, ஒளிபரப்பு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் ஆர்ப்பாட்டக்காரரான தானிஷ் அலி என்ற சந்தேகநபரும் கைதுசெய்யப்பட்டு தற்போது, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.