ஏழைக் குடும்பங்களின் மாணவர்களுக்கு இலவச அப்பியாசக் கொப்பிகளை வழங்க கல்வி அமைச்சு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

அதற்கான நிதியை ஒதுக்குவதற்கு மத்திய வங்கி நடவடிக்கை எடுத்து வருவதாக கல்வி அமைச்சர் திரு.சுசில் பிரேமஜயந்த குறிப்பிட்டார் .

இதேவேளை , பாடப்புத்தகங்களை அச்சிடுவதற்காக இந்தியாவில் இருந்து மை மற்றும் காகிதத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஆரம்ப தரங்களுக்கு மதிய உணவு வழங்குவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.