(எம்.எஸ்.எம்.ஸாகிர்)
கல்முனை லெஜன்ஸ் விளையாட்டு கழகம் நடாத்துகின்ற T20 தொடரின் குழு நிலை போட்டியில் கல்முனை ஹரிகேன்ஸ் விளையாட்டுக் கழகத்தை எதிர்த்தாடிய நிந்தவூர் லகான் விளையாட்டுக் கழகம் வெற்றிபெற்றது.
கல்முனை சந்தாங்கேணி மைதானத்தில் இடம்பெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற லகான் அணி முதலில் துடுப்பெடுத்தாடி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 136 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலளித்தாடிய கல்முனை ஹரிகேன்ஸ் விளையாட்டு கழகத்தினர், இருபது ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களைப் பெற்றதுடன் மேலதிக 11 ஓட்டங்களால் லகான் அணியினர் வெற்றியை தனதாக்கிக் கொண்டனர்.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கல்முனை பொரின் மார்ட் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று பணிப்பாளரும், சமூக செயற்பாட்டாளருமான நஜாத் ஜப்பார் கலந்து சிறப்பித்து, போட்டியின் ஆட்ட நாயகனுக்கு விருதும் வழங்கி கௌரவித்தார்.