பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு? - ரும்மான்

  Fayasa Fasil
By -
0



எனக்குத் தெரிந்த இரண்டு முட்டைக்கடைக்காரர்கள். பக்கத்து பக்கத்துக் கடைகள். ஒருவரின் முகத்தில் எண்ணெய் ஊற்றி முட்டைகளை உடைத்துப் போட்டால் காஸ் செலவு மிச்சம்.பொரிந்து வந்துவிடும். அவ்வளவு சூடு. 
மற்றவரோ, கித்துல் கருப்பட்டியில் செய்த வட்டிலப்பம் போல இனிக்கப் பேசுவார். பேசுவது மட்டுமில்லாமல், அடுத்தவர் சொல்வதையும் நன்றாக உள்வாங்கிக் கொள்வார். இவரது கடையில் விலை 3 ரூபாய் அதிகமானாலும், கூட்டம்  ஆஹா ஓஹோ என்று இவரிடமே செல்ல, சீக்கிரத்திலேயே பெரிய ஹோல் சேல் பிஸ்னஸ்  வியாபாரி ஆகிவிட்டார்.  

பலரைப் பார்த்தாயிற்று!  சின்னதாய் ஒரு வியாபார முயற்சியில் இறங்கியிருப்பார்கள். கொஞ்ச நாட்களிலேயே  காசு கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும்.
கொஞ்சம் கூர்ந்து நோக்கினால், அவர்களது ஆகப்பெரிய முதலீடு, தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தைகளும், மிக அழகான கவனிப்பும்,பண்பான நடத்தையுமாய் இருக்கும்.

 Communication is an investment!
தொடர்பாடும் திறன் ஒரு முதலீடு! 

வாழ்வின் எந்தவொரு சிக்கலான சந்தர்ப்பத்திலும், ஒழுங்காக தொடர்பாடல் பண்ணினாலே, பாதிக்கு மேல் பிரச்சினை தீர்ந்து விடும். நம்புங்கள். 

குறிப்பாகப் பெண்கள், தமது மனதில் இருப்பதை அழகாய் வெளிப்படுத்தும் கலையை அறிந்து வைத்து இருந்தாலே வீடுகள் சுவனச் சோலைகளாகிவிடும். 

தெளிவான வார்த்தைகளைப் புறந்தள்ளிவிட்டு,  ஜாடையாகவோ, மறைமுகமாகவோ, குறிப்பாலோ உணர்த்தி உணர்த்தியே பிரச்சினைகள், தேவைகளை வருடக்கணக்கில் இழுப்பார்கள் சில பெண்கள்! அதை விடுத்து, கேட்பவர் கோபப்படாத வண்ணம், சொற்களைத் தேர்ந்தெடுத்து, வீண் சொற்களைத் தவிர்த்து, அழகாக முன்வைத்தால், எவ்வளவு பெரிய சிக்கலும் இலகுவாகத் தீர்ந்துவிடும் தெரியுமா? குழந்தைகளுக்கும் இந்தக் கலையை சொல்லிக் கொடுங்கள். 
பூமியை வெல்ல ஆயுதம் எதற்கு பூப்பறிக்க கோடரி எதற்கு?
-ரும்மான்-

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)