திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீது 

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் அக்கட்சியில் இருந்து  விலகுவதாக வெள்ளிக்கிழமை அறிவித்தார். அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக குலாம் நபி ஆசாத் அறிவித்து இருப்பது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து வெளிப்படையான தகவல் தெரிவிக்கவில்லை. குலாப் நபி ஆசாத்தின் இத்தகைய முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

காங்கிரஸின் தலைமை மாற்றம் தொடர்பாக நீண்ட காலமாகவே குலாம் நபி ஆசாத் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதை பலமுறை வெளிப்படையாகவும் அறிவித்துள்ளார். தலைமை மாற்றம் கோரி சோனியா காந்திக்கு கடிதம் எழுதிய 23 தலைவர்கள் குழுவிலும் குலாம் நபி ஆசாத் இடம்பெற்றிருந்தார். முன்னதாக கடந்த வாரம் ஜம்மு காஷ்மீர் மாநில காங்கிரஸின் தலைவராக நியமிக்கப்பட்ட சில மணிநேரங்களில், இவர் தனது பதவியை இராஜினாமா செய்தது நினைவிருக்கலாம்.

பின்னர் குலாம் நபி ஆசாத் செய்தியாளரிடம் தெரிவித்ததாவது,

ராகுல் காந்தி கட்சியில் இணைந்தபோது தான் கட்சியில் அனைத்து விஷயங்களும் மாற்றப்பட்டுள்ளன. குறிப்பாக, கலந்து ஆலோசனை செய்யப்பவது முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தல் தோல்விக்கு ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான நடவடிக்கையே காரணம் என்றும், ராகுல்காந்தியின் நடவடிக்கைகள், அரசியலில் அவருடையை முதிர்ச்சியின்மையைக் காட்டுகிறது என்றும் குற்றம் சாட்டியுள்ளார். காங்கிரஸ் கட்சியைப் பொறுத்தவரையில் சோனியாகாந்தி பெயரளவிலேயே தலைவராக இருக்கிறார். ஆனால், கட்சியின் முக்கிய முடிவுகளான மாநிலத் தலைவர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமனம், சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவிப்பு உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ராகுல் காந்தி மற்றும் ராகுல் காந்தியைச் சார்ந்தோரால் மட்டுமே எடுக்கப்படுகிறது என்று கூறியுள்ளார். காங்கிரஸ் கட்சியிலும் ரிமோட் கண்ட்ரோல் முறை வந்துவிட்டது என்று வெளிப்படையாகக் குற்றம் சாட்டியுள்ளார். கட்சியில் தான் அரை நூற்றாண்டு காலமாக இருந்தும், கட்சியின் மூத்த தலைவர்களை மதிப்பதில்லை, அவர்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்கப்படவில்லை என்றும் காட்டமான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். குலாம் நபி ஆசாத்தின் இந்த குற்றச்சாட்டுகள் அரசியல் வட்டாரத்தில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

குலாம் நபி ஆசாத், ஜி 23 என்ற காங்கிரஸ் அதிருப்தி குழுவினரை வழிநடாத்தி வந்தார். 2020 ஆம் ஆண்டில் உருவான இந்தக் குழு சோனியா காந்தியிடம் நிரந்தர முழு நேர தலைமைக் கட்சிக்குத் தேவை என்று வலியுறுத்தியது. தொடர்ந்து அதை வலியுறுத்தி வந்த நிலையில், கபில் சிபல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். அவரைத் தொடர்ந்து தற்போது குலாம் நபி ஆசாத்தும் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.

அகில இந்திய அளவில் காங்கிரஸில் பல்வேறு முக்கிய பொறுப்புகளையும் மத்திய அமைச்சர் பதவியையும் வகித்தவர் குலாம் நபி ஆசாத். மேலும், இவர் ஏற்கெனவே காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய அரசியல் விவகார குழு உறுப்பினராகவும் உள்ளார். இந்த நிலையில், அவருக்கு ஜம்மு-காஷ்மீர் காங்கிரஸ் பிரசாரக் குழு தலைவர் பதவி கொடுக்கப்பட்டது பதவியிறக்க நடவடிக்கை என கருதியதன் காரணமாகவே ஆசாத் அந்தப் பதவியை இராஜினாமா செய்ததாகக் கூறப்பட்டது.

இந்நிலையில் குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியைக் கூட உதறிவிட்டு கட்சியில் இருந்து முழுமையாக விலகியுள்ளார்.

இராஜினாமா செய்வதற்கான காரணம் குறித்து வெளிப்படையான தகவல் தெரிவிக்கவில்லை. குலாப் நபி ஆசாத்தின் இத்தகைய முடிவு காங்கிரஸ் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக பார்க்கப்படுகிறது.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.