ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான ஒத்துழைப்பு அபிவிருத்தி உடன்படிக்கையில் அடுத்த 5 வருடங்களுக்கு இலங்கை கைச்சாத்திட்டுள்ளது.

கொரோனா பாதிப்பால் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை மீட்பதற்கு இந்த ஒப்பந்தம் உதவும் என தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், இலங்கையில் உள்ள அனைத்து மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வுக்கான பொருளாதார நடவடிக்கைகள், சமூக சேவைகள், நல்ல வேலைகள், சமூக நல்லிணக்கம் மற்றும் பொருளாதார மறுமலர்ச்சி ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதாக இலங்கையில் உள்ள ஐ.நா. தெரிவித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.