பதவிகள் கிடைக்காமை காரணமாக ஏமாற்றமடைந்துள்ள மொட்டு உறுப்பினர்கள் பசிலை சந்திக்கவுள்ளனர்

Rihmy Hakeem
By -
0

 

அரசாங்கத்தில் பதவிகள் கிடைக்காமை காரணமாக ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்கள் சிலர் ஏமாற்றமடைந்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் அவர்கள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஒருவரது இல்லத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு ஒன்றுகூடி கலந்துரையாடல் ஒன்றில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. 

அத்துடன் அவர்கள் இது தொடர்பில் தமது ஆதங்கங்களை கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்சவிடம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முன்வைக்கவுள்ளனர்.

ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை வெற்றி பெறச்செய்து ஆட்சியமைப்பதில் அர்ப்பணம் செய்த தமக்கு தற்போது இடம் இல்லாமல் சென்றிருப்பது குறித்து அவர்கள் மிகவும் வருத்தத்தில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. - Siyane News

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)