(யூ.கே. காலித்தீன்,  எம்.என்.எம். அப்றாஸ்)

156 ஆவது பொலிஸ் தினத்தை முன்னிட்டு சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட  ஆயுள்வேத வைத்திய சேவை முகாம் சாய்ந்தமருது ஆயுள்வேத வைத்தியசாலையில் இடம்பெற்றது.


ஆயுள்வேத வைத்திய அதிகாரி வைத்தியர் எஸ்.எம். றிசாத் தலைமையில், சாய்ந்தமருது பொலிஸ் ப் பொறுப்பதிகாரி யூ.எல். சம்சுடீனின் நெரிப்படுத்தலில் இன்று (06) ஆம்; திகதி நடைபெற்ற நிகழ்வில், கல்முனை பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஆயுள்வேத வைத்தியசாலைகளின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் நபில் கௌரவ அதிதியாகக் கலந்து கொண்டார். 


அத்தோடு, கிராமிய தொழிற்பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.எம். உதுமாலெவ்வை, கல்முனை மாநகர சபையின் திண்மக் கழிவகற்றல் பிரிவின் பொறுப்பதிகாரி யு.எம். இஸ்ஹாக், பிராஜா உரிமைகள் அமைப்பின் தலைவரும் முன்னாள் அதிபருமான எம்.எம். இஸ்மாயில், கிராம நிலதாரி எல்.நாசர் உட்பட ஏனைய அதிகளும் கலந்து சிறப்பித்தனர். 

இதன்போது ஆயுள்வேத வைத்தியர்களான வைத்தியர் எஸ்.எம். றிசாத் மற்றும் வைத்தியர் ஏ.எஸ்.என். சூசான் ஆகியோரினால் பொதுமக்களுக்கான ஆயுள்வேத வைத்திய முகாமும் இடம்பெற்று சிகிச்சையளிக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.
கருத்துரையிடுக

Blogger இயக்குவது.