(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கை இராணுவத்தின் 73 வது ஆண்டினை முன்னிட்டு மத அனுஷ்டான வைபவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் இன்று 26ஆம் திகதி காலை கொள்ளுப்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாசலில் இஸ்லாமிய மத வழிபாடுகள் நடைபெற்றன.  இந் நிகழ்வினை இலங்கை இரானுவமும் பள்ளிவாசல் நிர்வாக சபையும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தது. இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இரானுவத் தளபதி லெப்டினன்ட் கொமாண்டா் விக்கும் லியனகே கலந்து கொண்டாா்.

அத்துடன் இலங்கை இரானுவத்தில் உள்ள முஸ்லிம் பிரிகேடியா் அஸ்கா் முத்தலிப் உட்பட  மற்றும் அதிகாரிகளும் கலந்து கொண்டனா். கொள்ளுப்பிட்டி ஜம்ஆப் பள்ளிவாசலின் தலைவா் கலில் ஹாஜி, மற்றும் செயலாளா் ஹமீட் ஹாஜி, உறுப்பிணா் டொக்டா் தாரிக் மஹ்மூத் உட்பட் பள்ளிவாசல் நிர்வாக சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனா். மௌலவி இர்சாத் சிங்கள மொழி மூலம்  உரையாற்றினாா்.


கருத்துரையிடுக

Blogger இயக்குவது.