மேலும் சில மொட்டு எம்பிக்கள் டலஸ் அணியில் இணையவுள்ளனர்?

Rihmy Hakeem
By -
0

 ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) மேலும் சில எம்.பிக்கள், டலஸ் அழகப்பெரும தலைமையிலான சுயாதீன எம்.பிக்கள் குழுவில், விரைவில் இணையவுள்ளனர் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

SLPPயில் இருந்து சுயேட்சையாக செயற்பட தீர்மானித்த டலஸ் அழகப்பெரும, ஜீ.எல்.பீரிஸ் உட்பட 13 எம்.பிக்கள் கடந்த புதன்கிழமை பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்தனர்.

புதிய அரசியல் இயக்கத்தைத் தொடங்குவதற்கான பூர்வாங்கத் திட்டங்களை இக்குழு தயாரித்துள்ளதுடன், கடந்த வெள்ளிக்கிழமை தனி அலுவலகம் திறக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)