நாட்டில் ஞாபக மறதி நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பாரியளவில் அதிகரித்து வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலைமை தொடர்ந்தும் அதிகரிக்கும் பட்சத்தில் எதிர்வரும் 2050 ஆம் ஆண்டு அளவில் இலங்கையில் ஐந்து இலட்சம் அளவிலான ஞாபக மறதி நோயாளர்கள் காணப்படுவார்கள் என்று அல்சைமர் சங்கம் தெரிவித்துள்ளது. 

கொரோனா காலத்தில் மக்களின் இயல்பு வாழ்க்கை முடக்கப்பட்டிருந்தமையும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாக அல்சைமர் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, செப்டெம்பர் மாதம் சர்வதேச ஞாபகமறதி நோயாளர்களுக்கான மாதமாகவும், செப்டெம்பர் 21ஆம் திகதி சர்வதேச ஞாபக மறதியாளர்கள் தினமாகவும் பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.