ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மாத்தறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணா கொடிதுவக்கு தன்னுடைய இரு வருட கால பாராளுமன்ற சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளான ரூ.12 மில்லியனை மாத்தறை மாவட்டத்திலுள்ள 220 சமூக சேவை அமைப்புக்களுக்கு பகிர்ந்தளித்தார்.

அவர் பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும் போது தனக்கு கிடைக்கும் சம்பளம் உட்பட ஏனைய கொடுப்பனவுகளை மக்கள் சேவைக்கு பயன்படுத்துவதாக அவர் தெரிவித்திருந்தார். 

எதிர்வரும் காலங்களில் கிடைக்கும் கொடுப்பனவுகளையும் இவ்வாறு மக்கள் சேவைக்கு பயன்படுத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.