(அஷ்ரப் ஏ சமத்)

கல்வி மேம்பாட்டு பேரவையினால் கடந்த 25 வருட காலமாக இயங்கி வரும் கல்வி பயிற்சி நிலையத்தினால்  ஆரம்பக் கல்வி  முன்பள்ளிக் கல்வி டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் வைபவம்  சனிக்கிழமை (24) கொழும்பு 2 ல் உள்ள ரமடா ஹோட்டலில் நடைபெற்றது. இந் வைபவத்திற்கு பிரதம அதிதியாக கல்வி இராஜங்க அமைச்சா் அரவிந்தக் குமாா் கலந்து கொண்டாா். அவா் இராஜாங்க  கல்வியமைச்சராக பொறுப்பேற்று தலைநகரில் கலந்து கொள்ளும்  முதலாவது வைபவமாகும்.

இவ் வைபவம் கல்வி மேம்பாட்டு பேரவையின் ஸ்தாபகத் தலைவர் ஆசிரியா்   மருதுாா் .ஏ ஹசன் தலைமையில் இவ் வைபவம் நடைபெற்றது. இவ்  வைபவத்தில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் கண் வைத்தியசாலையின் பணிப்பாளா் டொக்டா் ஏ.ஆர்.எம். தௌபீக், சன்ரைஸ் கம்பனியின் முகாமைத்துவ பணிப்பாளா் எம்.இசட் ஹம்சா, உலமா கட்சித் தலைவா் முபாரக் அப்துல் மஜீத்,  ஆகியோர்களும் கலந்து சிறப்பித்தனா். 

இவ் வைபவத்திற்காக  அழைக்கப்பட்ட  மாணவ மாணவிகள்  போக்குவரத்து பிரச்சினை  மற்றும் பஸ் கட்டணம் அதிகரிப்பு கார்ணமாக கிழக்கு வடக்கு மாகாணங்களில் வாழும் முன் பள்ளி டிப்ளோமா சான்றிதழ் பெற்றவா்களது  சான்றிதழ்கள் அப்பிரதேசத்தில் உ்ளள மாவட்ட இணைப்பர்களை கொழும்பு அழைத்து அவா்கள் ஊடாக  சகல சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது. இதில் முன்பள்ளி ஆசிரியைகளுக்கான டிப்ளோமா, முன் பள்ளி முகாமைத்துவம்,  மனோத்துவம்.  போன்ற துறைகளில் பயின்று டிப்ளோமா  பயிற்சி நெறிகளை பூர்த்தி செய்தவா்களுக்கான சான்றிதழ்கள் கல்வி இராஜாங்க் அமைச்சா்  அரவிந்தக் குமாா் மற்றும் கௌரவ அதிதிகளினால் மாவட்ட இணைப்பாளா்களிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய இராஜாங்க அமைச்சா்  அரவிந்த குமார் ....

முஸ்லிம் சமுகம் கடந்த 30 வருடங்களுக்கு முன்பு ஒர் வர்த்தக சமூகமாக இருந்து வந்ததை முற்று முழுதாக மாற்றியமைத்தவா் முன்னால் கல்வியமைச்சா் அல்ஹாஜ்  பதியுத்தீன் மஹ்முத் அவா்களையே சாரும். அவர் முஸ்லிம் சமூகத்தில் அப்போது ஒர் அமைச்சரவை பத்திரத்தின் மூலம் ஆயிரக்கணக்கான முஸ்லிம் ஆசிரியா்களை  அரச பாடசாயைின் ஆசிரியா்களாக நியமித்தாா். தற்பொழுது கிழக்கு மாகாணம்  மற்றும் ஏனைய மாகாணங்களில் சிறுபான்மைச் சமுகம் கல்வியில் முன்னேறிச்  சிறந்த நிலையில் முன்னேறி வருகின்றனா்.

இதே போன்று தான் மலையகத்திலும் கல்விநிலையை உயா்த்துவதற்கும் கல்வியமைச்சில் கடந்த காலத்தில் கல்வி அமைச்சில் இராஜாங்க அமைச்சா்களாக தமிழ் பேசும் சமூகங்கள் முன்னெடுத்த  திட்டங்களை  முன்னேற்றுவதற்கு நான் என்னை அர்ப்பணிப்பேன். குறிப்பாக நுவரெலியா மாவட்டத்தில் மலையக கல்விக்கூடங்கள் பெரிதும் பௌதீக வளங்கள் குறைந்து காணபடுகின்றது.   எனது அலுவலகத்தில் சகல இனங்களும் சாா்ந்தவா்கள் கொண்ட அதிகாரிகளை நியமித்துள்ளேன். அவா்கள் சா்ா்ந்த கல்விப் பிரச்சினைகளை என்னை எந்த நேரத்திலும் தொடா்பு கொள்ள முடியும்.  நான் கண்டியில் பிறந்து கல்வி கற்று 6 வருடங்கள் ஒரு முஸ்லிம் வீட்டில் வாழ்ந்து பாடசாலைக்குச் சென்றுள்ளேன். அதன் பின்னா்  பதுளையில் எனது அரசியலை ஆரம்பித்து 10 வருடங்கள் மாகாண சபை உறுப்பிணராக இருந்து வந்துள்ளேன். அதன் பின்ன்ா் 2015லிருந்து மக்களால் பாராளுமன்ற உறுப்பிணராக தெரிபு செய்யப்பட்டு வந்துள்ளேன். இம்முறை எனக்கு கல்வி இராஜாங்க அமைச்சினை ஜனாதிபதியும் அவரின் செயலாளரும் என்னை தெரிவு செய்து தான் சார்ந்த சமுகம் மட்டுமல்ல சகல இன மக்களுக்கும் சேவை செய்யவே  என்னைப் பணிததுள்ளாாகள். ஆகவே தன்னால் முடியுமான மக்கள் சேவையை கல்கிக்கென நான் இரவு பகலாக செயல்ஆற்ற திடம் சா்ந்தப்பம் பூண்டுள்ளேன்.

மருதுாா் ஹசன் கல்வி அபிவிருத்தித் திட்டங்கள் அம்பாறை கிழக்கு மாகாணத்தில் 25 வருடகாலமாக செயல்பட்டு வருவதனை அறிந்து அதனை பாராட்டுகின்றேன், கிழக்கு மாகாணத்தில்  கல்வித்துறையில் சகல சமூகங்களும் முன்னேறி வருகின்றதைக் காணக்கூடியதாக உள்ளது. அன்மையில் க.பொ.த. உயர் தரத்தில் மட்டக்களப்பு மற்றும்  திருமலை மாவட்டத்தில் முதலாமிடத்தினை பெற்றுள்ள மாணவன் பற்றி இங்கு டொக்டா் தௌபீக் உரையாற்றினாா்.  இம் மாகாணம் போன்று மலையக மாவட்டங்களிலும் கல்வி மேம்பாட்டுக்கு  என்னால்  முடிந்த  கல்வி மேம்பாட்டினை  எடுப்பேன் எனவும் கல்வி இராஜாங்க அமைச்சா் அங்கு உரையாற்றினாா். 





கருத்துரையிடுக

Blogger இயக்குவது.