நந்திக்கடல், நாயாறு, சாம்பல் தீவு பகுதிகள்வனப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனம்

  Fayasa Fasil
By -
0


வடக்கில் நந்திக்கடல், நாயாறு மற்றும் கிழக்கில் சாம்பல் தீவு உள்ளிட்ட பகுதிகளை வனப் பாதுகாப்பு வலயங்களாக அரசு பிரகடனப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் விவசாயத்துறை மற்றும் வனவளப் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவிக்கையில்,

"திருகோணமலை மாவட்டத்தின் சாம்பல் தீவு, வடக்கில் முல்லைத்தீவு மாவட்டத்தில் நாயாறு, நந்திக்கடல் உள்ளிட்ட பிரதேசங்களே வனப் பாதுகாப்பு வலயங்களாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

மக்கள் மேற்கொள்ளும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக நாயாறு மற்றும் நந்திக்கடல் குளங்கள் மாசுபடுகின்றன. கழிவுகளால் அந்தக் குளங்கள் நிரம்பியுள்ளன. அந்தவகையில் சதுப்பு நிலங்கள் மற்றும் குளம் சார்ந்த உயிரினங்கள் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இத்தகைய சூழ்நிலையில் மேற்படி பகுதிகளைப் பாதுகாக்கும் வகையில் நிலைமையை ஆய்வு செய்வதற்காக விசேட குழு ஒன்றை நியமிக்கவுள்ளோம்.

அந்தக் குழுவிடமிருந்து இரண்டு வாரங்களுக்குள் அறிக்கை பெற்றுக்கொள்ளப்படும்" - என்றார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)