இலங்கையின் முதலாவது இரவுநேர சபாரி மிருகக்காட்சிசாலையாக பின்னவல மிருகக்காட்சிசாலையை பெயரிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பின்னவல மிருகக்காட்சிசாலை மற்றும் யானைகள் சரணாலயத்துடன் தொடர்புடைய வர்த்தக சமூகத்தினருக்கும், விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இப்பிரதேசத்தில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டிய செயற்பாடுகள் தொடர்பிலும் வர்த்தக சமூகம் அமைச்சரிடம் பிரேரணையை சமர்ப்பித்துள்ளது.

அதன்படி பின்னவல விலங்குகள் பூங்கா மற்றும் யானைகள் தங்குமிடத்தை இரவு நேர சபாரி பூங்காவாக பராமரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.