இளைஞர் பாராளுமன்றத்தின் வெளிவிவகார பிரதி அமைச்சர் அஹ்மத் சாதிக் மற்றும் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் முப்தி முயீன் ஆகியோர் இலங்கைக்கான ஈராக் நாட்டின் தூதுவர் மதிப்பிற்குரிய முஹம்மத் உபைத் ஜாபர் அவர்களை சமீபத்தில் ஈராக் தூதரகத்தில் சந்தித்தார்.

இச்சந்திப்பில் ; இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் அதில் பிரதானமாக இளைஞர்கள் முகம் கொடுக்கும் சவால்கள் மேலும் இளைஞர்களுக்கான வெளிவிவகார வாய்ப்புகள் மற்றும் அரசியல் துறையில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாடு, இளைஞர்களின் தற்போதைய மற்றும் எதிர்காலத் தலைமைத்துவம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

மேலும் இக்கலந்துரையாடலின் போது ஈராக் நாட்டின் தூதுவர் குறிப்பிடுகையில் ;
ஈராக் பழமை வாய்ந்த, சிறந்த கலாச்சாரம் கொண்ட ஒரு நாடு ஆகும். அந்த நாடு முகம்கொடுத்த பிரச்சினைகளில் முதன்மையானது யுத்தம் ஆகும். ஈராக் பூமிக்கு யுத்தம் பெரிய ஒரு அழிவை கொடுத்தது. ஈராக் நாடு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட போதிலும்கூட அது பழமை வாய்ந்த அழகிய தேசமாக தான் இன்றும் திகழ்கிறது.   இதுவரையில் நிலையான அரசு ஒன்று ஈராக் நாட்டில் இன்னும் நிறுவப்படவில்லை. எதிர்காலத்தில் அதற்கான செயற்பாடுகள் நடைபெறும் எனவும் இளைஞர்கள் அவர்களுடைய பங்கை நாட்டுக்காக செய்து கொண்டிருக்கிறார்கள் எனவும் குறிப்பிட்டார். மேலும்,  எதிர்காலத்தில் இலங்கையில் இளைஞர்கள் தொடர்பு பட்ட செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலின் பின்னர், இரு நாடுகளினதும் உறவு இளைஞர்களின் ஊடாக மேலும் வலுப்படுத்த சிறந்த நடவடிக்கைகள் எதிர்காலங்களில் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டனர்.

*Ahmath Sadique*
Deputy Minister of External Affairs and Diplomatic Relations Sri Lanka Youth Parliament🇱🇰

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.