இலங்கை எதிர்நோக்கியுள்ள ளபொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு உதவுமுகமாக இஸ்லாமிய நாடுகள் இலங்கையருக்கு அந்நாடுகளில் கூடுதலான தொழில் வாய்ப்புக்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளன. 

சுவூதி அரேபியா, கட்டார், ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் போன்ற நாடுகள் எதிர்காலத்தில் அந்நாடுகளில் உள்ள வெற்றிடங்களுக்கு கூடுதலான இலங்கையர்களைச் சேர்த்துக் கொள்ளவுள்ளன. 

இதன் ஒரு கட்டமாகவே கட்டார் விமானச் சேவை இலங்கையிலிருந்து சுமார் ஆயிரம் பேரை அதன் பல்வேறு வெற்றிடங்களுக்கு சேர்த்துக் கொள்வதற்காக வார இறுதியில் நேரடி நேர்முகப் பரீட்கைளை நடத்தி ஆட்களை தெரிவு செய்துள்ளது. இது தவிர கட்டாரில் நடைபெறவுள்ள உலக கால்பந்தாட்டப் போட்டியை முன்னிட்டு அந்நாட்டில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான வெற்றிடத்திற்கு இலங்கையர்களைக் கூடுதலாக இணைத்துக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கட்டார் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதேவேளை புதிதாக பதவியேற்றுள்ள சவூதி அரேபியத் தூதுவர் இரு தினங்களுக்கு முன்னர் பிரதம் தினேஷ் குணவர்தனவைச் சந்தித்தபோது பயிற்சி பெற்ற தொழிலாளர்களுக்கு கூடுதலான தொழில்வாய்ப்புக்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். 

பிரதமர் தினேஷ் குணவர்தனவை புதிய தூதுவர் காலித் பின் ஹமூத் நஸீர் அல்தஸாம் அல் சுல்தானியைச் சந்தித்தபோது, இலங்கை எதிர்நோக்கியுள்ள நெருக்கடி மற்றும் எரிபொருள் நெருக்கடியை எதிர்கொள்வதற்கு உதவுமாறு வேண்டுகோள் விடுத்தபோதே இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்புக்களை அதிகரிப்பது தனது பிரதான பணியாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். 

குறுகிய காலத்ததுக்குள் தற்போது சவூதி அரேபியாவில் தொழில்புரியும் 180,000 பேரை நான்கு இலட்சமாக அதிகரிக்க முடியும் என்று தூதுவர் பிரதமரிடம் தெரிவித்ததாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. 

நான் இலங்கையை விரும்புகின்றேன். உங்கள் நாட்டுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்வேன் என்று தூதுவர் சுல்தானி பிரதமரிடம் தெரிவித்துள்ளார். 

பிரதமருடன் சவூதி தூதுவர் சுமார் ஒரு மணி நேரமாக இலங்கை – சவூதி உறவுகளை மேம்படுத்துவது, பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடியதாக தூதுக் குழுவில் கலந்து கொண்ட நகீப் மௌலானா தெரிவித்தார்.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.