பிரித்தானியாவின் மகாராணி எலிசபெத் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

எலிசபெத் மகாராணியின் சுகயீனம் குறித்த செய்தியை கேட்டு தான் கவலையடைந்ததாக ஜனாதிபதி அறிக்கை ஒன்றை வௌியிட்டு குறிப்பிட்டுள்ளார்.

பிரித்தானிய மகாராணியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் இன்று செய்தி வெளியிட்டிருந்தன.

பிரித்தானிய மகாராணிக்கு தற்போது 96 வயதாகும்.

மகாராணியின் சுகயீனம் குறித்த செய்தியை தொடர்ந்து உலக நாடுகளின் கவனம் இது தொடர்பில் திரும்பியுள்ளது.

ராணியின் உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் பக்கிங்ஹாம் அரண்மனை அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.