கையில் குண்டை வைத்துக்கொண்டு வீதியில் சென்ற நபர் கைது

Rihmy Hakeem
By -
0

 

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டு ஒன்றுடன் புளத்சிங்கள, கல்லுமல வீதியில் நடமாடிய நபர் ஒருவரை நேற்று (09) பொலிஸார் கைது செய்துள்ளனர். 

கைதான நபர் பிரதேசத்தில் பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புபட்டு கைதான 40 வயதான நபர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

அவர் கைக்குண்டுடன் வீதியில் நடமாடிய விடயம் தொடர்பில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இன்றைய தினம் மதுகம நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)