தேசிய பாடசாலைகள் முறையை ஒழித்து முன்னைய பாடசாலை முறையை அறிமுகப்படுத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அடுத்தாண்டு முதல் அமுலுக்கு வரும் கல்விசீர்திருத்தத்தின் ஓர் அங்கமாக லீட் ஸ்கூல் என்னும் முன்னைய பாடசாலை முறை அமுலுக்கு கொண்டு வரப்படும் என கல்வி  அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

இத் திட்டப்படி 1200 முன்னால் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு பிரதேசத்திலுள்ள சிறிய பாடசாலைகள் இப் பாடசாலைக்கு உள்வாங்கப்படும்.இதன் மூலம் பெரிய பாடசாலைகளுக்கு சிறிய பாடசாலைகளுக்கு அனுமதி பெறும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளது.

ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கின்றது.முன்னைய பாடசாலைகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் பிரதான பாடசாலைகளுக்கு அனுமதி பெறுவதற்கு நிகழும் போட்டி இல்லாமல் போகும் என்று அமைச்சர் தெரிவித்தார்.

இதே நேரம் தற்போதுள்ள கல்வி வலயங்களின் எண்ணிக்கையை 120 ஆக அங்கீகரிப்பதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.தற்போது நாட்டில் 100 கல்வி வலயங்கள் உள்ளன.இதேவேளை புதிதாக கல்விச் சபைகளையும் ஏற்படுத்துவதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.