புத்தளம், மணல்குன்று பிரதேசத்திலுள்ள பாடசாலையில் மாணவி ஒருவர் நேற்று (10) தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.

புத்தளம், மனகுண்டுவ பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

இந்த சம்பவம் தொடர்பில் புத்தளம் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பாடசாலை மணியடித்ததையடுத்து சமய அனுஷ்டானத்திற்காக வகுப்பறையில் இருந்து விளையாட்டு மைதானத்தை நோக்கி ஓடும் போது சிறுமி தரையில் விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து  புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.

Tamil mirror

கருத்துரையிடுக

Blogger இயக்குவது.