நண்பர்களோடு பயணம், பல்கலை மாணவனுக்கு நடந்த சோகம்

  Fayasa Fasil
By -
0

05 இளைஞர்கள் பயணித்த வேன் ஒன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

கலவான ப்ரொஜெக்ட் வீதி கெவல் 10 பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏனைய நால்வரும் சிறு காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக கலவானை பொலிஸார் தெரிவித்தனர்.

அப்போது சாரதியாக இருந்த இளைஞனை சந்தேகத்தின் பேரில் கைது செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

ருஹுனு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் நிதி பீடத்தில் கல்வி கற்கும் கலவான தபசர கந்த பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடைய அஞ்சன சந்தேஷ் என்ற இளைஞனே விபத்தில் உயிரிழந்துள்ளார்.


கருத்துரையிடுக

0கருத்துகள்

கருத்துரையிடுக (0)